Posts

வேனிற்காதை

கடலாடியபின்  கோவலனும் மாதவியும் மாறி மாறி பாடிய வரி பாடலின் பொருளை இருவரும் பிழையாக புரிந்துகொண்டு ஊடி கோவலன் பிரிந்து செல்வதைத்தொடர்ந்து வேனிற்காதை இடம்பெறுகிறது. காதை நிகழ்வு  பொதிகை மலையினின்று தூதாக வந்த தென்றல், தமிழ் நிலத்தின் மன்னனாகிய மன்மதனின் மனதிற்கினிய தோழனாகிய இளவேனிலின் வருகையை சேனைத்தலைவனாகிய குயிலிடம் கூற, குயில் தன் சேனையாகிய மகளிரிடம் பணிஆணை அறிவிக்கும் தொனியில் உரத்து கூவுவதாகத்  துவங்குகிறது வேனிற்காதை.  கோவலன் ஊடி பிரிந்து செல்ல தனியளாக மனை திரும்பிய மாதவி பத்மாசனத்தில் அமர்ந்து மேம்பட்ட யாழினைக் கையிலெடுத்து மீட்டத்  துவங்குகிறாள். இசை முறையாக மீட்டுகையில் சிந்தை சிதற மனம் மயங்கி இசையில் தவறு நேர்வதை உணர்கிறாள். இந்த நிலைக்கு காரணம் கோவலனுடன் ஏற்பட்ட பிரிவே என்றுணர்ந்து தன்னை கோவலனுக்கு நினைவுபடுத்தும்  தன்சார்ந்த வாசனைப்பொருட்களால் இளவேனில் வந்துவிட்டதால்  ஊடலை கைவிட்டு மீண்டும் தன்னில்லம் வருமாறு  ஓலை எழுதி வசந்த மலையிடம் கொடுத்து கோவலனிடம் சேர்த்து அவனை அழைத்துக்கொண்டு வருமாறு கூறுகிறாள். வசந்தமாலை கொண்டுவரும் ஓலையை ஏற்க ம...