வேனிற்காதை

கடலாடியபின்  கோவலனும் மாதவியும் மாறி மாறி பாடிய வரி பாடலின் பொருளை இருவரும் பிழையாக புரிந்துகொண்டு ஊடி கோவலன் பிரிந்து செல்வதைத்தொடர்ந்து வேனிற்காதை இடம்பெறுகிறது.

காதை நிகழ்வு 

பொதிகை மலையினின்று தூதாக வந்த தென்றல், தமிழ் நிலத்தின் மன்னனாகிய மன்மதனின் மனதிற்கினிய தோழனாகிய இளவேனிலின் வருகையை சேனைத்தலைவனாகிய குயிலிடம் கூற, குயில் தன் சேனையாகிய மகளிரிடம் பணிஆணை அறிவிக்கும் தொனியில் உரத்து கூவுவதாகத்  துவங்குகிறது வேனிற்காதை. 

கோவலன் ஊடி பிரிந்து செல்ல தனியளாக மனை திரும்பிய மாதவி பத்மாசனத்தில் அமர்ந்து மேம்பட்ட யாழினைக் கையிலெடுத்து மீட்டத்  துவங்குகிறாள். இசை முறையாக மீட்டுகையில் சிந்தை சிதற மனம் மயங்கி இசையில் தவறு நேர்வதை உணர்கிறாள். இந்த நிலைக்கு காரணம் கோவலனுடன் ஏற்பட்ட பிரிவே என்றுணர்ந்து தன்னை கோவலனுக்கு நினைவுபடுத்தும்  தன்சார்ந்த வாசனைப்பொருட்களால் இளவேனில் வந்துவிட்டதால்  ஊடலை கைவிட்டு மீண்டும் தன்னில்லம் வருமாறு  ஓலை எழுதி வசந்த மலையிடம் கொடுத்து கோவலனிடம் சேர்த்து அவனை அழைத்துக்கொண்டு வருமாறு கூறுகிறாள்.

வசந்தமாலை கொண்டுவரும் ஓலையை ஏற்க மறுத்து, மாதவியை இழிவாக பேசி கோவலன் வர மறுக்க வசந்தமாலை மாதவிக்காக வருந்தி, கோவலன் வர மறுத்ததை மாதவியிடம் தெரிவிக்கிறாள். இதைக்கேட்ட மாதவி இன்று வராவிட்டால்,  நாளை வருவார் என்று தன்னை தானே தேற்றிக்கொள்கிறாள்.

சேனைத் தலைவனாகிய குயில், ஊடியிருக்கும்  மாந்தரெலாம் இளவேனிற்பொருட்டு இணையுடன் கூடும்படி கூவி ஆணையிடுவதாக முடிகிறது வேனிற்காதை.


விவரணைகள் 

தமிழ்நில எல்லைகள் 

மரபிசையின் கூறுகள் 

ஆசன எண்ணிக்கை 

பல வகை நறுமண மலர்கள் 

அணிகலன்கள் 


விவாதத்தில் கண்டடைந்தவை 

1. காலந்தோறும் நிகழும் ஆண்களின் செருக்கும் ஆளுமை கொண்ட பெண்களின் கையறுநிலையும்:

  கலைமகளாயினும் இரந்து நிற்கும் மாதவியின் மனநிலை அம்பை-பீஷ்மர் , ராணி மீனாக்ஷி - தாயுமானவர் ஆகியோருடன் ஒப்புநோக்க வைத்தது. 

2. ஏதேனும் ஒரு கலையை கற்றவர் துயரங்களை கடந்து செல்லும் / கையாளும் முறை 

ரஜோகுணம் கொண்ட அம்பை கொற்றவையாகி பீஷ்மரைக் கொல்வதும், ராணி மீனாக்ஷி மரணித்து தாயுமானவரிடம் தன்னை நிறுவ முயல்வதும்,
மாதவி தன் துயரை மிகைப்படுத்தி புலம்பாமலும்,  கோவலனை இழித்து பழிக்காமலும், "மாலை வாராராயினும் காலை காண்குவம்" என்று கடந்து செல்வதும், தான் கற்ற கலை, கல்வி கொண்டு துயரங்களை ஏற்றுக்கொள்ள  முயலும்  மாதவி, அறசெல்வியாகிய மணிமேகலையை உலகுக்கு தருவதும் விவாதிக்கப்பட்டது.  இசையால் வெளிப்படுத்தப்படும் துயரம் பேருரு கொள்வதுடன் ருத்ர வீணையை இசைக்கும் ராவணனின் துயரம் நினைவுகூரப்பட்டது.


Comments